Featured Category

Plantation Community Communication Facilitator (PCCF) – State Ministry of Estate Housing and Community Infrastructure

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பெருந்தோட்ட சமூக தொடா்பாடல் வசதியளிப்பாளர் உத்தியோகத்தர் பதவி(Plantation Community Communication Facilitator (PCCF)

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் உத்தியோகத்தர் ((Plantation Community Communication Facilitator (PCCF)) பதவிக்காக பின்வரும் தகைமைகளையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் 2021.01.22 ந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்பப்படவேண்டும்.

02. தேவையான தகைமைகள்
2.1 சிங்களம்/ தமிழ்/ஆங்கிலம், கணித பாடங்களுடன் மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையில ; ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

அத்துடன்

2.2 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டாம் மொழியில் சாதாரண சித்தியடைந்திருத்தல்.( சிங்கள மொழியில் திறமைச் சித்தி பெற்றுள்ளவர்கள் தமிழ் மொழியில் சாதாரண சித்தியும் தமிழ் மொழியில் திறமைச் சித்தி பெற்றுள்ளவர்கள் சிங்கள மொழியில் சாதாரண சித்தியும் பெற்றிருத்தல் என்பதாக) அத்துடன் 2.3. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்தில் (01) (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்

2.4 விண்ணப்பப் படிவம் பாரமேற்கப்படும் இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாமலும் 30
வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

2.5 பின்வரும் மாவட்டங்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிரந்தரமாக
வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

உப பட்டியல் இலக்கம் 02

மாவட்டம் பிரதேச செயலாளர் பிரிவு
இரத்தினபுரி  அயகம, பலாங்கொட, அலபான,  கொடகவெல‚ இம்புல்பே, கலவான, கொலொன்ன, குருவிட்ட, நிவித்திகல‚ ஒபநாயக, பெல்மடுல்ல, இரத்தினபுரி
மொனராகலை மொனராகல, வெல்லவாய
மாத்தறை   கொட்டபொல, பிட்டபெத்தற
நுவரெலியா அம்பகமுவ, ஹங்குரன்கெத்த. கொத்மலே,                                  நுவரெலிய‚ வலப்பன
களுத்தறை புலத்சிங்கள, தொடங்கொட, இங்கிரிய, மதுராவல, மத்துகம, பாலிந்தநுவர
கண்டி அக்குறண, தெல்தொட்ட, தொழுவ, கங்ககலகோறள,  கங்கவட்டகோறள, ஹத்தரலியத்த,                                                                        குண்டகசாலை, மெததும்பர,பன்வில, பஸ்வாகேகோறள, பாததும்பற,உடபளாத்த
காலி நாகொட, தவளம
மாத்தளை

அம்பன்கஹகோறள‚ மாதலே‚ ரத்தொட்ட‚ உக்குவெல யட்டவத்த

பதுளை

பதுளை,பண்டாரவெல, அல்ல, ஹல்துமுல்ல, ஹாலிஎல
ஹப்புத்தள, லுணுகல, மீகஹகிவுல, பசறை, சொரணாதொட்ட, ஊவாபரணகம, வெலிமட

கேகாலை

புலத்கொஹுபிட்டிய,தெஹிஓவிட்ட, தெரணியகல,
றுவன்வெல்ல, யட்டியன்தொட்ட

2.5 நல்ல குணமும் உள ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

3.0 சம்பளம்
சம்பள குறியீட்டு இலக்கம் MN-01 (3/2016)
சம்பள அளவுத்திட்டம் ரூபா 27,140– 300 X 10 – 350 X 11 –495 X 10 – 660 X 10 – 45,540/-

4.0 ஆட்சேர்ப்புச் செய்யும் முறை
தகைமை மதிப்பீடு நேர்முகப்பரீட்சை மூலம்

5.0 சேவையில் ஈடுபடுத ;துவதற்குரிய நிபந்தனைகள்
5.1.இந்தப் பதவி நிரந்தரமானதும் ஓய்வூதியத்துக்குரியதுமாகும். (ஓய்வூதிய சம்பள முறை பற்றி
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்களுக்கு உட்பட்டது.)

5.2. இந்தப் பதவியில் நியமனம் பெறுகின்றவர்கள் தாபன விதிக் கோவை மற்றும் நிதி
நடைமுறைகளுக்கும் திணைக்கள கட்டளைகளுக்கும் அரசு மற்றும் அரச சேவை
ஆணைக்குழுவினால் காலத்துக்கு காலம் வழங்கப்படுகின்ற நிபந்தனைகளுக்கு அல்லது ஒழுங்கு
விதிகளுக்கு கீழ்ப்படிதல் வேண்டும்.

5.3 நியமனம் மூன்று வருட தகுதிகாண் காலத்துக்கு உட்பட்டது.

5.4. பதவியில ; நியமனம் பெற்று மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் வினைத்திறமை காண்
தடைப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.

Gazette Notice Application

Please Stay with us to get Sri Lanka Government Jobs Update Every Day

Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *